ஸ்ரீ செல்லியம்மன் தேர் திருவிழா
வேப்பூர் அருகே 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிரமாண்டமாக நடைபெற்ற ஸ்ரீ செல்லியம்மன் தேர் திருவிழா 1000 கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வரும் ஸ்டோன் காட்சி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள மங்களூர் கிராமத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த வாரம் ஸ்ரீ செல்லியம்மன் கோவிலில் காப்பு கட்டு திருவிழா நடைபெற்று நாள்தோறும் சுவாமிக்கு அலங்காரம் செய்து பக்தர்கள் பூஜை செய்து வந்தனர்.

இன்று முக்கிய திருவிழாவை ஒட்டி சுமார் 40 அடி உயரம் கொண்ட தேரில் ஸ்ரீ செல்லியம்மன் சுவாமி தேரடி வீதி உடையார் தெரு கடைவீதி உள்ளிட்ட தெருக்களில் பக்தர்கள் புடை சூழ சுவாமி தேரில் வலம் வந்தது.
சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று சேர்ந்து நடத்திய இந்த தேர் திருவிழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மா குடிக்காடு கட்சி மையூர் சிறுப்பாக்கம் மலையனூர் மா புதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
