in

 தொகுதி மேம்பாட்டு நிதியில் பூமி பூஜை

 தொகுதி மேம்பாட்டு நிதியில் பூமி பூஜை

 

புதுச்சேரி கிருஷ்ணா நகர் 8-வது குறுக்குத் தெருவில் ரூ.18 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி எம்.பி. வைத்திலிங்கம் தொகுதி மேம்பாட்டு நிதியில் பூமி பூஜை..

காமராஜர் தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் 8-வது குறுக்குத் தெருவில், பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்வில் காமராஜர் தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

நீண்டநாள் கோரிக்கையாக இருந்த சாலை அமைக்கும் பணி தற்போது தொடங்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்த சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி இளநிலை பொறியாளர் ஜெய்சங்கர், உதவி பொறியாளர் ஹெலன் சர்மில நாதன் மற்றும் கிருஷ்ணா நகர் யுவராஜ், சிவா மெடிக்கல் சேகர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை

The Best Slots Online: A Comprehensive Guide for Players