புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்..
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த முறை உலகத் தமிழ் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.. இந்த மாநாடு நடத்துவது குறித்து இரண்டு குழுக்கள் முன்வந்துள்ளனர்.இந்த வல்லுனர்களை கொண்டு மாநாடு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
புதுச்சேரி அரசின் கடன் தொகை ரூ.2148.69.இதனை கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வருவாயை பெருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
11ம் மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுவது போல ஒன்பது, பத்து மாணவர்களுக்கு கையடக்க கனிணி வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வல்லுனர் குழு ஆலோசனை பெறப்பட்டிருப்பதால் கூறிய முதலமைச்சர் ரங்கசாமி முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்காது குறித்து கேட்டதற்கு தக்க நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்..

