in

சபாநாயகருடன் பேச்சுவார்த்தை: போராட்டத்தை திரும்பப்பெற்ற திமுக!

சபாநாயகருடன் பேச்சுவார்த்தை: போராட்டத்தை திரும்பப்பெற்ற திமுக!

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தற்காலிக சபாநாயகராக அதிமுக எம்எல்ஏ உள்ளார்.
நிரந்தரமாக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு இன்னும் தேர்தல் நடக்கவில்லை.
இப்பதவியை அதிமுகவிற்கு தர முதல் அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் பதவியை விட்டு கொடுக்க பாஜக மறுக்கிறது.சபாநாயகர் வேட்பாளர் யார் என இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் கடந்த ஜூன் 24ம் தேதி
சபாநாயகர் தேர்தலுக்கான கோப்பு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு அனுப்பப்பட்டது..இன்று வரை இதற்கு அனுமதி தரவில்லை.

இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் கூடுகிறது. துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் காலை 9.30 மணிக்கு உரையாற்றுகிறார். மதியம் மூன்று மணிக்கு நிதித்துறையை வகிக்கும் முதல்வர்
ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில் நிரந்தர சபாநாயகரை தேர்வு செய்யாவிட்டால்
துணைநிலை ஆளுநர் உரை, முதல்வரின் பட்ஜெட் உரையை திமுக புறக்கணிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து திமுகவினரை தற்காலிக சபாநாயகர் சபாநாயகர் அன்பழகன் இன்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் .

புதுச்சேரியில் மக்கள் பிரச்சனைகள் நிறைய உள்ள நிலையில் சபாநாயகர் விவகாரத்தை வைத்து சட்டமன்ற நிகழ்வை திமுக புறக்கணிக்க வேண்டாம் என அன்பழகன் கேட்டுக்கொண்டார்.அவரது வேண்டுகோளை ஏற்று திமுக சட்டமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டது.

What do you think?

புதுச்சேரி சட்டசபை அருகே பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் தனியார் மருத்துவமனையில் பரபரப்பு!