சிதம்பரத்தில் ஸ்ரீநந்தனார் வீதிஉலா!
சிதம்பரம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்சவத்தை முன்னிட்டு, நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீநந்தனார் வீதிஉலா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள செளந்தரநாயகி சமே சிவலோகநாதர் ஆலயத்திலிருந்து ஶ்ரீநந்தனார் உருவசிலை ஊர்வலம் புறப்பட்டு சிதம்பரம் தெற்கு சன்னதியை அடைந்தது.
அங்கு நந்தனார் கல்விக் கழக தலைவர் கே .ஐ .மணிரத்தினம் தலைமை வகித்து நந்தனார் பட ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நந்தனார் பட ஊர்வலம் நடாரஜர் கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் மடத்தை சென்றடைந்தது.

கீழசன்னதியில் நந்தனாருக்கு பொதுதீட்சிதர்கள் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. ஊர்வலத்தில் நந்தனார் கல்விக்கழகத் தலைவர் கே. ஐ. மணிரத்தினம் பொருளாளர் டி.ஜெயச்சந்திரன், கல்விக்கழக செயலாளர் வி.திருவாசகம், கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தினம், டிரஸ்ட் செயலாளர் டி.கே.எம்.வினோபா, நிர்வாகிகள் கஜேந்திரன், மணலூர் ரவி, இளைய அன்பழகன், பி.பன்னீர்செல்வம், கே.கனகசபை, டி.தெய்வசிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனத்தை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற நந்தனார் பட ஊர்வலத்தை தொடங்கி வைத்த நந்தனார் கல்விக்கழகத் தலைவர் கே.ஐ.மணிரத்தினம்.


