in

விவசாயிகள் நூதன போராட்டம் – திருவோடு ஏந்தி, மண் தின்று கண்டனம்

விவசாயிகள் நூதன போராட்டம் – திருவோடு ஏந்தி, மண் தின்று கண்டனம்

 

தமிழக அரசுக்கு எதிராக நாகை விவசாயிகள் நூதன போராட்டம் – திருவோடு ஏந்தி, மண் தின்று கண்டனம்

விவசாயிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு சங்க கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, நாகை மாவட்டம் அத்திபுலியூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசுக்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் திருவோடு ஏந்தியும், வாழையிலையில் மண் வைத்து தின்றும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

 

அரைநிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். நாகை, கீழ்வேளூர், திருமருகல், வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்த அமைச்சர் தென்னரசு

சிதம்பரத்தில் ஸ்ரீநந்தனார் வீதிஉலா!