ஆடி மூன்றாம் வெள்ளி: முத்தாள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு முத்தாள பரமேஸ்வரி பிடாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு 32 ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நடைப்பெற்றது.
திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்கவும், கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் நடக்க வேண்டியும் பிரார்த்தனை செய்து குத்துவிளக்கினை அம்மனாக பாவித்து 108 வேத மந்திரங்கள் முழங்க திருவிளக்கேற்றி குங்குமம், பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.
முன்னதாக பிடாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பெண்கள் பங்கேற்று மனமுருகி வழிபாடு செய்தனர்.


