in

புரட்டாசி மாத பிறப்பு வெள்ளிகவச பெருமாள்

புரட்டாசி மாத பிறப்பு வெள்ளிகவச பெருமாள்

 

நாமக்கல் மோகனுார் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசிமாத பிறப்பு முன்னிட்டு வெள்ளிகவச அலங்காரம் ஏராளமான பக்தர்கள் அதி காலை முதல் வழிபாடு.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தில் புரட்டாசிமாத பிறப்பை முன்னிட்டு இன்று மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் பின் சிறப்பு அலங்காரமாக வெள்ளிகவச அலங்காரம் சாற்றப்பட்டு நட்சத்திர தீபம் கும்ப தீபம் மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.

அப்போது அங்குள்ள சம்மோகன கோபால கிருஷ்ணனுக்கு சிறப்பு அர்ச்சனை மகா தீபம்காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுவழிபாடு செய்தனர்.

மேலும் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதல் பெருமாளை ஏராளமானோர் தரிசனம் பெற்று சென்றனர்.

What do you think?

நாமக்கல் மோகனூர் துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரம்