பரமத்தி வேலூர் சனீஸ்வர பகவான் அபிஷேக ஆராதனை
நாமக்கல் பரமத்தி வேலூர் எல்லையம்மன் ஆலயத்தில் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனை.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள யோக சனீஸ்வர பகவானுக்கு 18.7.26 ஆடி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
விழாவின் நிகழ்வாக யோக சனீஸ்வர பகவானுக்கு எண்ணெய் காப்பிட்டு பஞ்சாமிர்தம் பால் தயிர் திருமஞ்சனம் இளநீர் அரிசி மாவு மஞ்சள் மற்றும் சந்தனம் அபிஷேகமுடன் கலச அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்க பட்டது.

அதனைத் தொடர்ந்து யோக சனீஸ்வரனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து நாமாவளிகள் கூறி உதிரிப் பூக்களினால் அர்ச்சனை செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.


