in

புதுவை இந்தியன் எக்ஸ்சர்வீஸ் லீக் நலச்சங்கத்தின் உலக மகளிர் தின விழா


Watch – YouTube Click

புதுவை இந்தியன் எக்ஸ்சர்வீஸ் லீக் நலச்சங்கத்தின் உலக மகளிர் தின விழா  கொண்டாடப்பட்டது…

புதுவை இந்தியன் எக்ஸ்சர்வீஸ் லீக் நலச்சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா வெகு சிறப்புடன் சங்க அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. நலச்சங்க உறுப்பினர்கள் வீரத்தாய்மார்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் புடை சூழ சங்க அலுவலகத்தில் நிரந்தரமான சங்கத்தின் கொடியை புதுவை IESL நலச்சங்கத்தின் தலைவர் பெருமாள் அவர்களால் முறைப்படி கொடியேற்றி உலக மகளிர் தின விழா தொடங்கி வைக்கப்பட்டது.

விழாவின் தொடர்ச்சியாக புதுவை மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி MP அவர்கள் விழாவிற்கு தலைமையேற்று விழாவில் பங்குபெற்ற அனைத்து மகளிருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு சங்கத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

விழாவின் சங்க நிர்வாகிகளான மூத்த உபதலைவர் ஜோதிகுமார், உபதலைவர் கேப்டன் பரமசிவம், பொது செயலாளர் தேவராஜீ, செயலாளர்கள் பாளையா, தனுசு இவர்களுடன் பொருளாளர் ரவிச்சந்திரன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் தட்சணாமூர்த்தி, குணசேகர், துளசிதாஸ், கிருஷ்ணமூர்த்தி, குப்பன், அரிபுத்திரன், அசோகன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவின் சிறப்பு அம்சமாக உறுப்பினர்களின் அனேக பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மும்பையில் கைது