in

தசரா திருவிழா நிறைவு: நெல்லை அம்மன் கோயில்களில் பூம்பல்லாக்கு உற்சவம்!

தசரா திருவிழா நிறைவு: நெல்லை அம்மன் கோயில்களில் பூம்பல்லாக்கு உற்சவம்!

திருநெல்வேலி மாநகரின் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் தசரா திருவிழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து எட்டாம் நாளான இன்று பூம்பல்லாக்கு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை விஜயதசமி திருநாளன்று பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன்கள் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பூம்பல்லாக்கு உற்சவத்தையொட்டி வண்ணாரப்பேட்டை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பேராத்து செல்வி அம்மன் திருக்கோவில், முத்தாரம்மன் திருக்கோவில், மீனாட்சிபுரம் உலகம்மன் திருக்கோவில், புதுஅம்மன் திருக்கோவில், சியாமளா தேவி அம்மன் திருக்கோவில், திருநெல்வேலி டவுன் பட்டாபிராமர் அம்மன் திருக்கோவில், ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில், திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பூம்பல்லாக்கு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

வண்ணாரப்பேட்டை பேராத்து செல்வி அம்மன் திருக்கோவில் மற்றும் முத்தாரம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வண்ண வண்ண வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூம்பல்லாக்கில் பேராத்து செல்வி அம்மன் சிவபூஜை செய்யும் திருக்கோலத்திலும், முத்தாரம்மன் நடராஜப் பெருமான் மற்றும் சிவகாமி அம்பாள் திருக்கோலத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேளதாளங்கள் முழங்க வண்ணாரப்பேட்டை சாலைதெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வீதியுலா நிறைவடைந்ததும் அம்மன்கள் பூம்பல்லாக்கில் மீண்டும் கோவில்களைச் சென்றடைந்தனர்.

What do you think?

Casino mit Kreditkarte mit Bonus: Ein Leitfaden für Spieler

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் பேரணி.