in

உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா

உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா

 

உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவில் இரண்டாம் நாளான நேற்று அம்பாள் விஸ்வகர்மேஸ்வர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறக் கூடிய தசரா திருவிழாவில் நாள்தோறும் அம்மாள் பல்வேறு அவதார திரு கோலத்தில் எழுந்திருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

திருவிழாவில் தினமும் அம்பாளுக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம், மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

இதில் ஏராளமன பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இரவு அம்பாள் பல்வேறு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்கள்
தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்காரம் வரும் 20-ஆம் தேதி நள்ளிரவில் கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.

What do you think?

கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய வாகன பழுதுபார்ப்போர் சங்கம்

தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல்