in ,

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகல தொடக்கம்!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகல தொடக்கம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா, யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து காலை 5.00 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து காலை 07-00 மணிக்கு கோவில் நிர்வாகத்திடம் இருந்து தாம்பூலம் பெறப்பட்டு யாகசாலை பூஜைகளுடன் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது .

இதனைத் தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் சிங்கப்பூர் மலேசியா லண்டன் இலங்கை உள்ளிட்ட பல்வேறு
வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே
கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து விரதம் இருக்க துவங்கினர்.

மேலும் ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் அடி பிரதட்சணம் செய்து வேண்டுதல் நிறைவேற்றினர்..மேலும் விரதம் இருக்ககூடிய பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் 16 இடங்களில் ஏராளமானோர் தங்கி விரதம் இருக்க

தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வருகிற 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

What do you think?

நாகூர் ஆண்டவர் தர்கா 470-வது கந்தூரி விழா! நாகையில் வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்!

பெண் போல பேசி 3 கோடி ரூபாய் வரை மோசடி