in ,

சோழவந்தான் அருகே கந்த சஷ்டி விழா! காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கிய பக்தர்கள்!

சோழவந்தான் அருகே கந்த சஷ்டி விழா! காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கிய பக்தர்கள்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திருமூலநாத சாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா தொடங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

 

முன்னதாக முருகப் பெருமானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்று பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து கந்த சஷ்டி விழாவில் விரதம் இருக்கும் பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முருகப் பெருமானை தரிசனம் செய்து காப்புகட்டி தங்கள் விரதத்தை தொடங்கினார்கள் கந்த சஷ்டி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சூரசம்காரம் நிகழ்ச்சி வருகின்ற 15ஆம் தேதியும் திருக்கல்யாண வைபவம் 16ஆம் தேதியும் நடைபெற உள்ளது தினசரி முருகப்பெருமான் தென்கரை கிராமத்தின் நான்கு ரத வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர் கந்த சஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்

What do you think?

சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி விழா கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்!