in

மகா ஸ்கந்த சஷ்டி பெரு விழா

மகா ஸ்கந்த சஷ்டி பெரு விழா

 

ஓசூர் ஸ்ரீ வேல்முருகன் ஆலயத்தில் மகா ஸ்கந்த சஷ்டி பெரு விழாவின் உற்சவத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம்.

ஐப்பசி மாதம் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்து சூரனை சம்ஹாரம் செய்து தேவர்களை காத்த உற்சவத்தை ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி பெருவிழாவாக முருகப்பெருமானின் ஆலயங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேல்முருகன் ஆலயத்தில் மகா ஸ்கந்த சஷ்டி பெருவிழாவின், உற்சவம் வெகு விமர்சியாக துவங்கியது.

கோவிலில் மூலவர் ஸ்ரீ வேல்முருகனுக்கு அதிகாலை முதலே பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ வேல் முருகனுக்கு மகா மங்கள ஆரத்தி நிறைவேற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று எம்பெருமான் வேல்முருகனை தரிசித்து வழிபட்டனர்.

இந்த உற்சவமானது தொடர்ந்து 16 ஆம் தேதி வரை நடைபெற்று முருகப்பெருமான் திருவீதி உலா நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.

மேலும், 14ஆம் தேதி சனிக்கிழமை அன்று முருகப்பெருமான், தாயார் சக்தி தேவியிடமிருந்து சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்னை சக்தியிடம் இருந்து பெற்ற சக்தி வேல் கொண்டு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

பின்னர் 16 ஆம் தேதி முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.

What do you think?

மழையால் சகதியான கிராம சாலை! மூதாட்டியை கட்டிலில் தூக்கிச் சென்ற அவலம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தர் சஷ்டித் திருவிழா