in

மழையால் சகதியான கிராம சாலை! மூதாட்டியை கட்டிலில் தூக்கிச் சென்ற அவலம்!

மழையால் சகதியான கிராம சாலை! மூதாட்டியை கட்டிலில் தூக்கிச் சென்ற அவலம்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே எருமைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டல்புளி கிராமத்திற்குச் செல்லும் பிரதான சாலை கடந்த 15 ஆண்டு காலத்திற்கு மேலாக மாவட்ட நிர்வாகம்ஊரக வளர்ச்சி துறை ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக சீரமைத்து சாலை அமைக்கப்படாத நிலையில் கமுதியில் இருந்து பெருநாழி செல்லும் சாலையிலிருந்து பொட்டல்புளி கிராமத்திற்கு செல்லும் பிரதான கடந்த 15 ஆண்டு காலத்திற்கு முன் தார் சாலையாக அமைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்தச் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும் குளியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கரிசல் மண் சகதி காடாக காட்சி அளிக்கிறது.

இதனால் கிராமத்திலிருந்து பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் தற்காலிகமாக கல்வி நிலையங்களுக்கு கல்வி கற்க செல்வதை தவிர்த்து வருகின்றனர்

இந்நிலையில் தற்போது இன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வராத நிலையில் கிராமத்தினர் கட்டிலில் வைத்து தூக்கி சென்று மருத்துவ சிகிச்சைக்காக அந்த மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் நிலை தொடர்வதாக கிராமத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு அக்கிராம பெண்கள் உள்ளிட்ட சிறுவர்கள் இருகரம் கூப்பி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்

What do you think?

தேனியில் எஸ்எஸ்ஐ கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 6 இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகா ஸ்கந்த சஷ்டி பெரு விழா