in

ஆண்கள் மட்டும் வழிபடும் பெண் தெய்வ வினோத வழிபாடு

ஆண்கள் மட்டும் வழிபடும் பெண் தெய்வ வினோத வழிபாடு

 

பருவ மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கமுதி அருகே 39 செம்மறி ஆடுகள் பலியிட்டு ஆண்கள் மட்டும் வழிபடும் பெண் தெய்வ வினோத வழிபாடு.

1500 கிலோ ஆட்டுக்கறி பச்சரிசி சாதத்துடன் சுட சுட … கம கம .. விருந்துடன் நடைபெற்ற அசைவ விருந்து திருவிழா.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல் நாடு கிராமம்.
இக்கிராம கண்மாய் கரையில் அமைந்துள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம்.

வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதம் 3வது வாரத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா இங்கு நடைபெற்று வருகிறது.

கோவில் திருவிழா என்றாலே பெண்கள், பொங்கல் வைக்க முளைப்பாரி எடுக்க, கும்மிபாட்டு என அமர்க்களப்படும். ஆனால் பெண் வாசனையை ஆகாத பெண் தெய்வம் ஒன்று உள்ளது என்றால் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் உள்ள எல்லைப் பிடாரியம்மன் தான்.

முன்பொரு காலத்தில் 5 ஆண்களோடு பிறந்த பெண் ஒருவர் கண்மாய் கரையில் தூங்கிக் கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற காளைமாடு அப்பெண்ணை தாண்டி சென்றதால் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்ததாகவும் சில மாதம் சென்றவுடன் வயிறு பெரியதாக , அந்த பெண்ணின் ஐந்து அண்ணிகளால் நடத்தை கெட்டுப் போனதாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அந்தப் பெண்ணின் வயிற்றை அறுத்து பார்த்தபோது உள்ளே கன்றுக்குட்டி இருந்ததாகவும் அப்போது அப்பெண் சடலம் மாயமாகி எல்லை பிடாரி அம்மனாக மாறியதாக கதை உண்டு.

பெண்களால் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்டதால் பெண்களை வெறுக்கும் எல்லைப்பிடாரியம்மன் முதல் நாடு கிராம மக்களின் கனவில் வந்து தங்கள் ஊர் எல்லையில் இருந்து தெய்வமாக இருந்து காப்பாற்றுவேன், என்றும் என்னை ஆண்கள் மட்டும் வருடம் ஒரு முறை ஆடு வெட்டி பலி கொடுத்து வழிபடவேண்டும் கூறியதாக சொல்லப்படுகிறது.

சாமி கும்பிடும் நேரத்தில் அப்பகுதிக்கு பெண்கள் வரக்கூடாது, என கூறியதால் வருடம் ஒரு முறை ஆண்களால இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த திருவிழா நடக்கும் தேதி அறிவித்ததில் இருந்து ஒரு வார காலம் இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வருவதில்லை.

ஒருவர் தன் பெண் குழந்தைக்கு ஆண்களைப் போல சட்டை, டவுசர் அணிந்து சாமி கும்பிட கூட்டிவந்து திரும்பி செல்லும் வேளையில் அந்தப் பெண் குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இப்பகுதிக்கு பெண்கள் யாரும் தப்பித்தவறி கூட வருவதில்லை.

இந்த திருவிழாவுக்காக முதல் நாடு கிராமத்தில் ஊர் கூடி வசூலித்து நேற்று நள்ளிரவில் 11.00 மணி அளவில் ஆண்கள் மட்டும் ஒன்று கூடி கால் படாதவாறு மண்ணெடுத்து பீடம் அமைத்து மாலை அணிவித்து பொங்கல் வைத்து, கைக்குத்தல் அரிசி சாதம் செய்து, 40 செம்மறி ஆட்டு கிடாய் பலியிட்டு, பச்சரி சாதத்தை உருண்டைகளாக உருட்டி எல்லைப்பிடாரி அம்மனுக்கு படையலிட்டு, பூஜை செய்யப்பட்டு சாத உருண்டை மற்றும் கறி விருந்து ஆண்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால் மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜை பொருட்கள் அனைத்தும் அங்கேயே புதைக்கப்பட்டது.

ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாவிற்கு கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மலர் மாலையுடன் வந்து எல்லை பிடாரி அம்மனை வழிபட்டனர்.

இந்த திருவிழாவில் கடந்த ஆண்டு தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த நெல்லை பச்ச அரிசியாக குத்தி அதனை சாதமாக தயார் செய்து இங்கு கலந்து கொள்ளும் அனைத்து ஆண்களுக்கும் அசைவ விருந்தாக பரிமாறப்படுகிறது.

விவசாயம் செழிக்க வேண்டியும், பருவமழை பெய்ய வேண்டியும் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மூன்றாவது வாரத்தில் இந்த திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

What do you think?

திருவாடானை ஸ்ரீ மகாசக்தி முத்து மாரியம்மன் கோவில் பூத்தட்டு உற்சவ விழா

The Ultimate Guide to Casino Games E-Wallets