🌧️🚨 புதுச்சேரியில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. சுற்றுலாப் படகுகளை இயக்கவும்
“அர்னாப்‘ புயல் காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி புதுச்சேரி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.கடல் சீற்றத்தின் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் இரண்டாம் என் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீன் வளத்துறையின் எச்சரிக்கை காரணமாக மூன்றாவதாக நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.அனைத்து விசைப்படகுகளிலும் தேங்காய் திட்டு துறைமுகத்தில் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்தநிலையில் சுற்றுலா படகுகளை இயக்குவதற்கு சுற்றுலாத்துறை தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா படகுகளை இயக்கக் கூடாது என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது.


