புதுச்சேரி குரு சித்தாந்த சுவாமிகள் தேவஸ்தானத்தில் அன்னாபிஷேக விழா கோலாகலம்!
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீமத் குரு சித்தாந்த சுவாமிகள் தேவஸ்தானத்தில், ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக வைபவம் சிறப்பாக நடைபெற்றது

இதனை முன்னிட்டு, குரு சித்தாந்த சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மாலை திருமேனிக்கு 50 கிலோ அன்னம், 250 கிலோ காய்கறிகள், 50 கிலோ பழங்கள் மற்றும் 20 கிலோ இனிப்பு வகைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மாலை 7.30 மணியளவில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர், அன்னாபிஷேக அலங்காரம் கலைக்கப்பட்டு, அன்னம் புனித நீரில் கரைக்கப்பட்டதாகவும், சுவாமியின் திருமேனியில் அலங்கரிக்கப்பட்டிருந்த பொருட்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பால் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் சந்தன அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது.. ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற இந்த அன்னாபிஷேக வைபவத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


