in

குடுகுடுப்புக்காரனை களமிறக்கிய திமுக

குடுகுடுப்புக்காரனை களமிறக்கிய திமுக

 

செஞ்சியில் ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா மு க ஸ்டாலின் சொல்கின்ற எம்பிக்கு வாக்களியுங்கள் ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா நூதன முறையில் குடுகுடுப்புக்காரன் வேட அணிந்து திமுக பிரச்சாரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு வ உ சி தெரு பகுதிகளில் உள்ள வீடுகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரச்சாரத்தை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தொடங்கி வைத்து திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

இதற்கிடையே சேலத்தில் இருந்து குடுகுடுப்பு காரன் மேடம் அணிந்த திமுக கழக பேச்சாளர் கோவிந்தன் என்பவரை வரவழைத்து நூதன முறையில் ஜக்கம்மா சொல்ற ஜக்கம்மா சொல்ற இந்த தொகுதியில் மு க ஸ்டாலின் சொல்கின்ற எம் பி க்கு வாக்களியுங்கள் ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா, மேலும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அவர்கள் செய்த சாதனை குறித்து ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்ற என கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சாரத்தின் போது நகர செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்ளனர்.

What do you think?

ஸ்மார்ட் மோதிரம் வெளியிட சாம்சங் திட்டம்

121 பெண்கள் பக்தி பாடல்களுக்கு கோலாட்டம் ஆடியபடி விடிய விடிய கிரிவலம்