in

பொதுமக்கள் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் ஆட்டம் போட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி


Watch – YouTube Click

பொதுமக்கள் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் ஆட்டம் போட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 100% பொதுமக்கள் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று மாலை பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தின் அருகில் நடைபெற்றது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதன் அடிப்படையில் நெல்லை பாளையங்கோட்டையில் இன்று மாலை பள்ளி கல்லூரி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து இளைஞர்களின் சிறப்பு நடன நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தின் பின்புறம் உள்ள சாலையோர உணவகங்களில் ஏப்ரல் 19 -ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உதவி பயிற்சி ஆட்சியர் கிஷன் குமார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை தாசில்தார் சரவணன், பேரிடர் மேலாண்மை துறை தாசில்தார் செல்வன், மண்டல துணை தாசில்தார் பாலச்சந்தர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சபேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு சுற்றுப்பயணம் அ ம மு க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

தென் சென்னை தொகுதியில் தமிழிசை போட்டி?