in

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு சுற்றுப்பயணம் அ ம மு க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்


Watch – YouTube Click

 

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு சுற்றுப்பயணம் அ ம மு க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

 

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பாஜகவோடு இணைந்த பிறகு குடும்பத்தோடு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சாமி தரிசனம் செய்தார்.

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த டிடிவி தினகரனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவை அளித்திருப்பதாகவும் இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வெற்றி பெற்று வருவார்கள் என்றும் கடந்த பத்து ஆண்டுகளாக எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் ஆட்சியாக நரேந்திர மோடி ஆட்சி நடைபெற்று கொண்டு இருப்பதாகவும்.

தமிழகத்திற்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை பெற்றுத் தரவும். நரேந்திர மோடி இந்தியாவை வல்லரசு நாடாக உயர்த்துவார் என்று அந்த கூட்டணியில் இணைந்திருப்பதாக தெரிவித்தவர்.

பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

எதற்கு இத்தனை மெத்தனமோ ?? தேர்தல் விதி மீறலால் சர்ச்சை

பொதுமக்கள் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் ஆட்டம் போட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி