in

மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலைக்காட்சி


Watch – YouTube Click

மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலைக்காட்சி 

நெல்லையில் காற்று மாசுபடுதல், நெகிழி, மின்சாரம் மற்றும் மின்னணு கழிவுகள்,விவசாயம் மற்றும் நீர் சேகரிப்பு போன்ற தலைப்புகளின் கீழ் சூழலியலின் பன்முகத்தன்மையை காக்கும் சீரான செயல்முறைகள் உள்ளிட்ட நிகழ்வுகளை மாணவிகள் தத்ரூபமா நடித்து நிலைக்காட்சியாக நின்றனர். இது பார்வையாளர்களை கவரும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது.

பாளையங்கோட்டை தூய இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரி சார்பில் காற்று மாசுபடுதல், நெகிழி, மின்சாரம் மற்றும் மின்னணு கழிவுகள்,விவசாயம் மற்றும் நீர் சேகரிப்பு ஆகியவை குறித்து மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிலைக காட்சியா நின்று நடித்துக் காட்டினாா்கள் . இந்த ஆண்டுக்கான நிலைக்காட்சி இன்று கல்வியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி நகர பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் செல்வன். குழற்கழக பன்னாட்டு மாவட்ட எண்- 3212 இன் ஆளுநர் முத்தையா பிள்ளை மற்றும் தூய யோவான் கல்வியல் கல்லூரி முதல்வர் முனைவர் தேவசகாயம் செல்வகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிலைக்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனா்.

இதில் 150 மாணவிகள் கலந்து கொண்டு குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என 5 குழுக்களாக பிரிந்து காற்று மாசுபடுதல், நெகிழி, மின்சாரம் மற்றும் மின்னணு கழிவுகள்,விவசாயம் மற்றும் நீர் சேகரிப்பு போன்ற தலைப்புகளின் கீழ் சூழலியலின் பன்முகத்தன்மையை காக்கும் சீரான செயல்முறைகள் உள்ளிட்ட நிகழ்வுகளை மாணவிகள் தத்ரூபமா நடித்து நிலைக்காட்சியாக நின்றனர். மேலும் வேளாண்மை எதிர்காலத்தில் எவ்வளவு அவசியம் என்பதை இந்த விழிப்புணர்வு மூலம்காட்சிப்படுத்தினர் ஆரம்பத்தில் விவசாயம் என்பது பெருகிவரும் அடிப்படை தொழிலாக இருந்தது ஆனால் இன்றைய காலங்களில் மழை இல்லாமல் வறண்ட நிலங்களாகவும் நிலங்களை விற்பனை செய்து கட்டிடங்களை உருவாக்குதல், இதை ஒழித்து ஆரம்ப கால வாழ்க்கையை மீண்டும் உருவாக்குவோம்,அதில் கிராமத்து வாழ்க்கை முறை, செழிப்பான வயல்களை உருவாக்கி காய்கறிகளை பயிர் செய்து அதனை உழவர் சந்தையில் இறக்குமதி செய்து விவசாயின் வாழ்க்கை பயன்படுமாறு விழிப்புணர்வை மாணவ ஆசிரியர்கள் ஏற்படுத்தினர். இது பார்வையாளர்களை கவரும் விதமாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இதனை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பல்வேறு கல்லூரிகள், கல்வியல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியரும் திரளான பொதுமக்களும ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பெண்களுக்கு 5 ஜாக்பாட் திட்டங்கள் கலக்கும் காங்கிரஸ்

பொண்டாட்டி கிட்ட கேட்காம வேறு யாரு கிட்ட கேட்க முடியும்? சரத்குமார் ஆவேசம்