in

தேர் கலசங்களுக்கு சிறப்பு பூஜை…

தேர் கலசங்களுக்கு சிறப்பு பூஜை…

 

சம்மந்த விநாயகர் சன்னதியில் தேரின் கலசங்களுக்கு சிறப்பு பூஜை….

பஞ்ச மூர்த்திகள் மரத்தேரில் பொருத்தப்பட்ட கலசங்கள்……

பஞ்சபூ ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அனுதினமும் காலை மற்றும் இரவு வேலைகளில் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் ஏழாம் நாள் விழாவில் பஞ்ச மூர்த்திகள் மகா ரதம் என்று சொல்லக்கூடிய மரத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வருவது வழக்கம்.

இந்த ஆண்டு நாளை மறுநாள் 21ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக தேர்களின் மேல் பொருத்தப்படும் கலசங்களுக்கு அண்ணாமலையார் கோவிலில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கோவில் ஊழியர்கள் கலசங்களை கொண்டு சென்று விநாயகர் தேர், முருகர் தேர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் தேர், பராசக்தி அம்மன் தேர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய பஞ்ச மூர்த்திகளின் தேரின் உச்சியில் கலசங்களை பொருத்தினர்.

What do you think?

தவெக ஆட்சியையும் மக்கள் விரட்டியடிப்பார்கள்

சரண கோஷம் முழங்க விரதம் தொடங்கிய பக்தர்கள்