in

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் உலக மரபு வார விழா

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் உலக மரபு வார விழா

 

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் உலக மரபு வார விழா ஒட்டி நவம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை பார்வையிட இலவச அனுமதி சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் உலக மரபு வார விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது வரலாற்று சின்னமான டேனிஸ் கோட்டை இந்த டேனிஷ் கோட்டை அகழ் வைப்பகமாக செயல்பட்டு வருகிறது வரலாற்று பொக்கிஷங்கள் செப்பேடுகள் கல்வெட்டுகள் நாணயங்கள் ஓலைச்சுவடிகள் போர் கருவிகள் பண்டைய கால பொருட்கள் என பல வரலாற்று பொக்கிஷங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை 1620 ஆம் ஆண்டு கட்டப்பட்டு இன்றளவும் கட்டிடக்கலைக்கு சிறப்பாக எடுத்துக்காட்டாக கம்பீரமாக கடற்கரையில் அமைந்துள்ளது.

இவ்வளவு சிறப்பு பெற்ற தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் தற்பொழுது உலக மரபு வார விழா ஒட்டி நவம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மாணவர்கள் என அனைவருக்கும் பார்வையிட இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பலர் ஆர்வத்துடன் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு பார்வை இட வருகின்றனர் ஆண்டுதோறும் உலக மரபு தின வார விழா கொண்டாடப்படும் நிலையில் அவற்றை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்த டேனிஷ் கோட்டையில் உலக மரபு வார விழாவை ஒரு வார காலம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாட வேண்டும் எனவும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்பொழுது பார்வையிட இலவசம் என்ற முறையில் மட்டும் உள்ளது எனவும் மாவட்ட நிர்வாகம் தொல்லியல் துறை சார்பில் விழாவாக நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

இளம்பெண்ணை நடுத்தெருவில் விட்ட பலே கில்லாடி ஏலகிரியில் கைது!

காணொளி வாயிலாக திறந்த காய்கறி அங்காடி