in

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும்! திருவாவடுதுறை ஆதீனம் அமைச்சர்களிடம் வலியுறுத்தல்!

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும்! திருவாவடுதுறை ஆதீனம் அமைச்சர்களிடம் வலியுறுத்தல்!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த வேளாண்துறை அமைச்சர் வினோத்,உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் வேங்கடரமணன் ஆகியோர் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வருகை புரிந்தனர்.

அங்கு ஆதீனத்து 24 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

அவர்களுக்கு ஆதீனம் சார்பில் ஆலய பிரசாதங்கள் வழங்கி மடாதிபதி அருளாசி வழங்கினார்.தொடர்ந்து அமைச்சர்களிடம் பேசிய மடாதிபதி, காவிரியில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்வது கடினமாகும்,இந்த ஆண்டு பருவமழை குறைந்து பெய்துள்ளது.மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்,விவசாயத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்

.தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர்கள் அவரிடம் உறுதி அளித்தனர்.

What do you think?

தஞ்சாவூர் மாநகராட்சி பேரூராட்சி நிர்வாகங்களின் நிதி முடக்கத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் கல்லாங்குளம் அண்ணாமலையார் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா 7-ம் நாள் நிகழ்வு திருகல்யாண வைபவம்