in

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் காவிரி துலா உற்சவ திருக்கல்யாண வைபவம்!

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் காவிரி துலா உற்சவ திருக்கல்யாண வைபவம்!

மயிலாடுதுறையில் அமைந்துள்ள மாயூரநாதர் ஆலயம் திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும்.

இங்குள்ள காவிரிக்கரையில் அம்பாள் மயிலாக இறைவனை பூஜித்ததால் சிவன் மயிலாக உருவம் கொண்டு பார்வதி தேவியுடன் சேர்ந்து மாயூரதாண்டவம் ஆடி மயில் உருநீங்கி சுயஉரு பெற்றாள் என்பது ஐதீகம்.அதன்படி ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் காவிரியில் புனித நீராடி தங்களின் பாவங்களை போக்கி கொண்டதாகவும் புராணம் கூறுவதால் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி 1ம் தேதி முதல் மாயூரநாதர், வதான்யேஸ்வரர் ஆலயங்களில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது.

பத்து நாள் உற்சவம் கொடியேற்றம் செய்யப்பட்டு நடைபெற்று கொண்டு நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக 7ம் திருநாளான மாயூரநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.முன்னதாக மாயூரநாதர்-அபயாம்பிகையுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து ஊஞ்சள் உற்சவம் மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்று.

பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். சிவாச்சாரியார்கள் ,வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத மாங்கல்ய தாரணம் நடைபெற்றது.பின்னர் பூர்ணாகுதி செய்யப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சோடச தீபாரதனை , மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

What do you think?

பறவைக் காச்சல் பிராய்லர் கோழிகள் அழிப்பு

கார்த்திகை தீபத் திருவிழா அகல் விளக்கு செய்யும் பணியில் தீவிரம்