in

மத நல்லிணக்கத்தைப் போற்றும் இஸ்லாமியர்

மத நல்லிணக்கத்தைப் போற்றும் இஸ்லாமியர்

 

மயிலாடுதுறை அருகே மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 200 குடும்பங்களுக்கு வெடி கிப்ட் பாக்ஸ் வழங்கிய இஸ்லாமியர் தூய்மை பணியாளர்களுக்கும் புத்தாடைகள்,இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள உளுத்துக்குப்பை ஊராட்சியின் 3-வது வார்டில் அனைத்து மதத்தினரையும் சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரியாஸ்,கடந்த ஏழு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம மக்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் தனது சொந்த செலவில் தீபாவளி பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறார்.

அந்த வகையில், வருகின்ற 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டும் தனது சொந்த செலவில் வார்டில் வசிக்கும் சுமார் 200 குடும்பத்தினருக்கும் வெடி கிப்ட் பாக்ஸ் வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து அவர்களுக்கு வேட்டி, சட்டை, சேலை, ஸ்வீட் பாக்ஸ் மற்றும் வெடி பாக்ஸ் வழங்கினார். தொடர்ந்து வீடு வீடாகச் சென்று கிராம மக்களுக்கு வெடி கிப்ட் பாக்ஸ் வழங்கினார்.

இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட சிறுவர்கள் உற்சாகத்துடன் வெடி‌பாக்ஸை எடுத்துச் சென்றனர். அப்போது சிறுவர்களிடம் பாதுகாப்பாகப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது பகுதியில் வசிக்கும் அனைத்து மதத்தினருக்கும் வெடி கிப்ட் பாக்ஸ் வழங்கி வாழ்த்து தெரிவித்த சம்பவம், மத நல்லிணக்கத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதுடன், கிராம மக்களிடையே நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

வேப்பூரில் கடும் பனிமூட்டம் உருண்டு செல்லும் வாகனங்கள்

கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை வழிப்பாடு