in

திமுக மகளிர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக மகளிர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

 

மயிலாடுதுறையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று பெண்கள் பாதுகாப்பு குறித்தும், விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், திமுக மகளிர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது.

திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சாந்தி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் நிர்வாகிகள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

What do you think?

சென்னை வில்லிவாக்கத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

தீப மலையின் உச்சியில் சிறப்பு பூஜை