மயிலாடுதுறையில் 847 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.34 கோடியில் உதவி உபகரணங்கள்!
மயிலாடுதுறை மாவட்டம் தனியார் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின் கீழ் அலிம்கோ நிறுவனம் வாயிலாக 847 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ரூ.1.34 கோடி மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விழாவை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சுதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார்.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்,பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன்,சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன்,மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வட்டார அளவில் ஜூன் 19, 20, 22, 23, 25 ஆகிய தேதிகளிலும்,உட்கோட்ட அளவில் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளிலும் மதிப்பீட்டு முகாம்கள் நடைபெற்றன.
இதில் 1110 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட 847 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் தரங்கம்பாடியை சேர்ந்த ஆனந்தராஜ் கோரிக்கை மனுவை பரிசீலித்து 60 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி,மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் புவனா,மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, அலிம்கோ இளநிலை மேலாளர் ரிஷப் மெஹ்ரோத்ரா கலந்து கொண்டனர்.


