in

பட்டை நாமம் கருப்பு துண்டு அணிந்து போராட்டம்

பட்டை நாமம் கருப்பு துண்டு அணிந்து போராட்டம்

 

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வெளிநடப்பு செய்து பட்டை நாமம் கருப்பு துண்டு அணிந்து போராட்டம்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரேவதி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் ஏரி குளங்களை தூர் வாரி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சுகுமாரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் சந்தணம் பட்டையாக அடித்து கருப்பு துண்டு அணிந்து மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

ஸ்ரீ சட்டநாத ஐயனார் ஆலய மகா கும்பாபிஷேகம்

கடற்கரை சாலையில் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி