in ,

ஆட்சியாளர்கள் திருந்தாவிட்டால் சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் பெற முடியாது…திமுக அமைப்பாளர் சிவா பேட்டி.


Watch – YouTube Click

ஆட்சியாளர்கள் திருந்தாவிட்டால் சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் பெற முடியாது…திமுக அமைப்பாளர் சிவா பேட்டி.

புதுச்சேரியில் திமுக மருத்துவ முகாமை துவக்கி வைத்த திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், புதுச்சேரியில் ஆளும்கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் அவர்கள்தான் ஆட்சி செய்கின்றனர்.

22 எம்எல்ஏக்கள் பலத்தோடு, மத்திய அரசின் அதிகாரத்தோடு, மாநில காவல்துறையின் முழு பங்களிப்போடு என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி தேர்தலை சந்தித்தது. இருப்பினும் ஏன் அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தார்கள்? என சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

புதுச்சேரி மக்கள் எம்எல்ஏவை தேர்வு செய்கின்றனர். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் எம்எல்ஏக்கள் முதலாளிகளாக மாறிவிட்டனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கிவிட்டனர். துறைமுகத்தை தனியார் மயமாக்கிவிட்டனர். மின்துறை, துறைமுகம் தனியார்மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

புதுச்சேரிக்கு இழைத்துள்ள அநீதிகளை திரும்பப்பெற வேண்டும். ஏழை, எளிய மக்கள் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் புதுச்சேரியில் ரேஷன்கடைகளையே திறக்கவில்லை. புதுச்சேரியில் முரண்பட்ட அரசு என்பதால் அரசுக்கு எதிராக, மத்திய அரசுக்கு எதிராக, ஆட்சியாளர்களுக்கு எதிராக, மோடிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.

மக்களுக்கு கிடைத்த ஜனநாயக ஆயுதம் மூலம் பதில் அளித்துள்ளனர். முதல அமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்கூட தங்கள் தொகுதிகளில் கூடுதலாக வாக்குகளை பெற முடியவில்லை. ஆட்சியாளர்கள் வேண்டாம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

ஆட்சியாளர்கள் தங்களை திருத்தி கொண்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்கலம். இல்லாவிட்டால் டெபாசிட் கூட பெற முடியாது என
சிவா தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் அதிமுக உட்பட பல வேட்பாளர்கள் டெபாசிட் இழந்து விட்டார்களே…? என்ற கேள்விக்கு அரசியல் பேசும் போது காமெடி செய்ய வேண்டாம் என சிவா பதிலளித்தார்.


Watch – YouTube Click

What do you think?

பார்வை தெரியாதவரை ஏமாற்றி உணவு வாங்கித் தருவதாக கூறி சிறுமியை கடத்திச் சென்ற நபர் கைது

வந்தவாசியில், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்விற்காக தேர்வர்களுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது