in

போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: நாகை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: நாகை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

​நாகப்பட்டினத்தில் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், நுகத்தூர் காக்கழனி தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகையன் மகன் ஆறுமுகம் (32). இவர் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப் பிரிவுகள் மற்றும் மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(1)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.​

இந்த வழக்கின் விசாரணை நாகப்பட்டினம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையைத் தொடர்ந்து நீதிபதி ராஜ்குமார் தீர்ப்பு வழங்கினார்.

​அதில், ஆறுமுகம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் மெய்க்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

What do you think?

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்

ஸ்ரீ சட்டநாத ஐயனார் ஆலய மகா கும்பாபிஷேகம்