in

ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் சங்கட சதுர்த்தி சிறப்பு வழிபாடு!

ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் சங்கட சதுர்த்தி சிறப்பு வழிபாடு!

 

ஓசூர் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் கோவிலில் சங்கட சதுர்த்தி சிறப்பு வழிபாடு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் திருக்கோவிலில், சங்கட சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதையொட்டி, விநாயகருக்கு பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டு அருள் பெற்றனர். .

What do you think?

நவ நரசிம்மர் திருக்கோவில் – கருங்கல் தூண்கள் பிரதிஷ்டை யாக பூஜை

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்