in

ஓசூர் அருகே காலவதியான கேக் விற்ற பேக்கரிக்கு சீல் வைத்த உணவுத்துறை அதிகாரிகள்

ஓசூர் அருகே காலவதியான கேக் விற்ற பேக்கரிக்கு சீல் வைத்த உணவுத்துறை அதிகாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூரில் பாகலூர் – பேரிகை சாலையோரமாக மயூரா பேக்கரி செயல்பட்டு வருகிறது..

இந்த பேக்கரியில் தயாரித்து காலாவதியான கேக் உள்ளிட்ட இனிப்பு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து

ஓசூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மயூரா பேக்கரியில் ஆய்வு செய்தபோது காலாவதியான உணவு பொருட்கள் இருந்ததை உறுதி செய்து அவற்றை அழிக்க எடுத்துச் சென்றனர் தொடர்ந்து பேக்கரியை பூட்டி சீலிட்ட அதிகாரிகள், மூன்று நாட்களுக்குள் காலாவதியான உணவு பொருட்களை அகற்றிவிட்டு சுத்தமான, ஆரோக்கியமான உணவுகளை தயாரித்து, உணவுத்துறையினரின் ஆய்விற்கு பிறகு பேக்கரியை திறக்க அறிவுறுத்தி சென்றுள்ளனர்..

ஓசூர் மாநகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் இதுப்போன்ற தரமற்ற காலவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

What do you think?

மருது பாண்டியர்களின் 225ஆம் ஆண்டு குருபூஜை விழா முத்துராமலிங்க தேவரின் 119ஆம் ஆண்டு ஜெயந்தி விழா 64வது குருபூஜை முன்னிட்டு