காசி விஸ்வநாதர் திருக்கோவில் பிரதோஷ சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும் நந்தி பகவானையும் தரிசித்து வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.