வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போலிசார் விசாரணை
நாகை அருகே தேவூர் ஊராட்சி இரட்டைமதகடியில் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு; போலிசார் விசாரணை
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட தேவூர் ஊராட்சி இரட்டைமதகடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி பொண்ணி தனது மகன், மகளோடு வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பொண்ணி கடந்த 19 ம் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டு இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் கேட்டில் உள்ள பூட்டு அறுக்கப்பட்டும் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது இரண்டு பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
வீட்டின் முன்பு இருந்த சிசிடிவி கேமராவை திருட்டில் ஈடுப்பட்டவர்கள் கட்டியிருந்த கைளியை வைத்து மறைத்தும் உள்ளே இருந்த சிசிடிவி வைபை மோடத்தையும் உடைத்து எடுத்து சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிக்சன் நேரடி ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சோதனை செய்தனர். பீரோவில் நகைகளை புடைவையில் சுற்றி வைத்துள்ளனர். திருட வந்த நபர்கள் துணிகளை கீழே தள்ளிவிட்டு நகையை தேடிய போது துணியோடு சேர்ந்து நகைகளும் கீழே விழுந்தால் நகை, பணம் தப்பியது.
இதனால் பீரோவில் இருந்த வீடியோ கேமரா, ஐபோன், டேப், ஆண்ட்ரைடு போன் 1, வெள்ளி காயின் 2, தோடு 2 கிராம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து போலிசார் தீவிர விசாரனை மேற்க் கொண்டு வருகின்றனர். நாகை அருகே பூட்டி இருந்த வீட்டை உடைத்து பொருட்களை திருடி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


