in

“அரோகரா” கோஷம் அமைச்சர் ஷாஜகான் கருத்து

“அரோகரா” கோஷம் அமைச்சர் ஷாஜகான் கருத்து

 

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் எழுப்பப்பட்ட கோஷம் முருகரை அவமதிக்கும் வகையிலானது அல்ல – ஆர்வத்தின் காரணமாக கோஷங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும் செய்திருக்கக் கூடாது என அமைச்சர் ஷாஜகான் கருத்து.

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கடந்த 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 19ஆம் தேதியும், 20ஆம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவமும் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி, பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ஷாஜகான் நாகூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியவர் ; திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது எழுப்பப்பட்ட “அரோகரா” கோஷம் தொடர்பான சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஷாஜகான், கடவுளுக்கு நிகராக எந்த தனி மனிதனும் இருக்க முடியாது என்றும், பக்தர்களின் ஆர்வத்தால் சில கோஷங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும், அதை முருகரை அவமதிக்கும் வகையிலான கோஷமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், இதுபோன்ற கோஷங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்துள்ளதாகவும், தர்கா கமிட்டி சார்பில் வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைக்க உள்ளதாகவும் அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றத்தில் பாரம்பரியமாக எந்தெந்த இடங்களில் தீபம் ஏற்றப்படுகிறதோ, அதே இடங்களில் தீபம் ஏற்றுவதற்கு எந்தத் தரப்பினருக்கும், அரசுக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால், அதற்கு மாற்றாக கருத்துகள் முன்வைக்கப்படும்போதுதான் சர்ச்சை எழுகிறது.

இந்த விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என உறுதியாக நம்புவதாக அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

What do you think?

மம்மூட்டியை விமர்சித்த நெட்டிசன்கள்… தனுஷின் பதிலால் அரங்கமே சிரிப்பலை!

470 ஆண்டுகால நாகூர் கந்தூரி விழா சிறப்பு வர்ணஜாலம்