in

போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் இல்லை மாணவி குற்றச்சாட்டு

போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் இல்லை மாணவி குற்றச்சாட்டு

 

தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் போதுமான அளவிற்கு இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை சட்டமன்ற நூலக குழு ஆய்வின்போது மாணவி குற்றச்சாட்டு.

கோவை பெரியார் அறிவுலகம் புத்தக சர்ச்சை பெருமளவில் எழுந்து உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை நூலக குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலக குழு தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜோதிமணி தலைமையில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது நூலகத்தில் உள்ள நூல்கள் வாசகர்கள் தேவை என்ன என்பது குறித்து கேட்டறிந்தனர்.

போட்டித் தேர்வுக்கான பயிலரங்க மாணவிகள் ஆய்வு குழுவிடம்
தஞ்சை நூலகத்தில் மட்டும் சுமார் 5,000 மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு படித்து வருகிறார்கள்.

பெரும்பாலும் கிராமப்புறத்தில் இருந்து வருகிறார்கள். ஆனால் இங்கு போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் மிக, மிக குறைவாகவே உள்ளது.

5 வருஷத்துக்கு முன்பு பள்ளி பாட புத்தகத்தை படித்தாலே போதும் என்ற நிலை மாறி, இப்போது TNPSC சிலபஸ் அடிப்படையில் தான் கேள்வி கேட்கிறார்கள்.

இதற்கு தேவையான புத்தகங்களை போதுமான அளவிற்கு வாங்கி வைக்க வேண்டும் பலமுறை கோரிக்கை வைக்கும் தங்களுக்கு தேவையான புத்தகங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது

மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரசு போட்டி தேர்வு மட்டும் இன்றி மத்திய அரசு போட்டி தேர்வுகள் ரயில்வே தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கு மாண புத்தகங்களை வாங்கி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதனை கேட்ட ஆய்வு குழுவினர் உடனடியாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

What do you think?

ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவ மாணவிகள்

அனல் மின் நிலைய செயல்பாடு குறித்து ஆய்வு