ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவ மாணவிகள்
இரும்புதலை கிராமத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவ மாணவிகள்
கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் இரும்புதலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் சாலியமங்கலம் அம்மாபேட்டை தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.
இந்நிலையில் காலையில் பள்ளிக்கு செல்லும் போது ஒரு பேருந்து மட்டுமே செல்வதால் மாணவ மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. அதனால் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் அதேபோல் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் வரை செல்லும் 454 என்ற எண் கொண்ட அரசு பேருந்தும் இயக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


