in

புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பரிசு அறிவிப்பு

புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பரிசு அறிவிப்பு

 

புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பரிசு அறிவிப்பு! 3 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.700 மதிப்பிலான சிறப்பு தொகுப்பு – அமைச்சர் சிவக்கொழுந்து காரைக்காலில் அறிவிப்பு!

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 லட்சம் ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு ரூ.700 மதிப்பிலான சிறப்பு தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்.

இந்த தொகுப்பில் 2 லிட்டர் சமையல் எண்ணெய், 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலை பருப்பு, அரை கிலோ ரவா மற்றும் அரை கிலோ மைதா உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.

இந்த தீபாவளி சிறப்பு தொகுப்பு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

What do you think?

கண் தொழில்நுட்ப ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்