திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் ஹம்ச வாகன புறப்பாடு
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் இரண்டாம் நாள் இரவு ஹம்ச வாகன புறப்பாடு
நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று இரவு திருப்பதி ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி தங்க அம்சவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சரஸ்வதி அலங்கார திருக்கோளத்தில் அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்ம உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை சின்னசேஷ வாகன புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று இரவு ஹம்ச வாகன புறப்பாடு நடைபெற்றது.

புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்து தங்கத்தால் தயார் செய்யப்பட்ட ஹம்சவாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தீப தூப நைவேத்திய சமர்ப்பணங்களுக்கு பின் கோவில் மாடவீதிகளில் உற்சவர் மலையப்ப சாமியின் ஹம்ச வாகன புறப்பாடு நடைபெற்றது.

அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதி மலைக்கு வந்திருக்கும் பக்தர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஹம்ச வாகன புறப்பாட்டை தேவஸ்தான ஜீயர் குழுவினர் திவ்ய பிரபந்த காணத்துடன் முன் நடத்த, வேத பண்டிதர்கள் நான் மறை வேத கோஷங்களுடன் பின்தொடர கண்களால் கட்சியாக ஏழுமலையானின் ஹம்சவாகன புறப்பாடு திருப்பதி மலையில் உள்ள கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

