in

திருவாடானை ஸ்ரீ மகாசக்தி முத்து மாரியம்மன் கோவில் பூத்தட்டு உற்சவ விழா

திருவாடானை ஸ்ரீ மகாசக்தி முத்து மாரியம்மன் கோவில் பூத்தட்டு உற்சவ விழா

 

திருவாடானை ஸ்ரீ மகாசக்தி முத்து மாரியம்மன் கோவில் பூத்தட்டு உற்சவ விழா விமரிசையாக நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பிடாரி கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி முத்து மாரியம்மன் கோவில் பூத்தட்டு உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது.

கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இவ்விழாவில், அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன், திரவியப் பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

விழாவின் ஒவ்வொரு நாளும் பக்தர்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத் தொடர்ந்து, பெண் பக்தர்கள் விரதமிருந்து பூத்தட்டு ஏந்தி, வானவேடிக்கைகள் மற்றும் மேளதாளங்கள் முழங்க, இளைஞர்களின் ஆரவாரத்துடன் வீதி உலா வது கோவிலை அடைந்தனர்.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்.

What do you think?

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் ஹம்ச வாகன புறப்பாடு

ஆண்கள் மட்டும் வழிபடும் பெண் தெய்வ வினோத வழிபாடு