in

சரண கோஷம் முழங்க விரதம் தொடங்கிய பக்தர்கள்

சரண கோஷம் முழங்க விரதம் தொடங்கிய பக்தர்கள்

 

கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஐயப்ப சரண கோஷம் முழங்க விரதம் தொடங்கிய பக்தர்கள்…! ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் துளசி மாலை அணிந்து விரதம் தொடக்கம்… உலக நலன் வேண்டி பிரார்த்தனை…!

ராமநாதபுரத்தை அடுத்த ரெகுநாதபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

கார்த்திகை முதல் நாளான இன்று அதிகாலையிலேயே எழுந்து புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள், ஆலயத்திற்கு வருகை தந்து குருசாமி மோகன் சுவாமிகள் ஆசியுடன் துளசி மாலை அணிந்து ஒரு மண்டல விரதத்தைத் தொடங்கினர்.

தொடர்ந்து, உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும், உலக நன்மை மற்றும் அமைதி நிலவவும் ஐயப்பனிடம் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

மேலும், இன்று முதல் சபரிமலை யாத்திரை நிறைவடையும் வரை புகையிலை, மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் தீய பழக்கவழக்கங்களை முற்றிலும் கைவிட்டு, மனத்தூய்மையுடனும் கட்டுப்பாட்டுடனும் விரதத்தை கடைப்பிடிப்போம் என பக்தர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் ஐயப்ப சரண கோஷம் முழங்க பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.

கார்த்திகை முதல் நாளிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியதால் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயம் விழாக்கோலம் பூண்டது.

What do you think?

தேர் கலசங்களுக்கு சிறப்பு பூஜை…

இளம்பெண்ணை நடுத்தெருவில் விட்ட பலே கில்லாடி ஏலகிரியில் கைது!