காணொளி வாயிலாக திறந்த காய்கறி அங்காடி
விருத்தாசலத்தில் 5 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய தினசரி காய்கறி அங்காடியை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி காட்டுக்கூடலூர் சாலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய தினசரி காய்கறி அங்காடியை, இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
விருத்தாசலம் காய்கறி புதிய அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விருத்தாசலம் நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் விருத்தாசலம் வட்டாட்சியர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் இ.எம்.ஆர்.எஸ். விஜய், துணைச் செயலாளர் வாசு, நகரச் செயலாளர் அப்பாஸ் அலி, தே.மு.தி.க. நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான ராஜ்குமார், அவை தலைவர் சங்கர், நகர மன்ற உறுப்பினர்கள், விருத்தாசலம் பழமலை நாதர் காய்கறி வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் கே கே எல் சுப்பிரமணியன் செயலாளர் யூ எஸ் மதி துணை தலைவர்கள் மார்க்கெட் நடராஜன் ராஜேந்திரன். வர்த்தக சங்க தலைவர் கோபு, செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு,. காய்கறி அங்காடி வியாபாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்…


