in

ரிஷி சுனக் நன்றாக சமைப்பார் மனைவி அக்ஷதா மூர்த்தி பாராட்டு


Watch – YouTube Click

ரிஷி சுனக் நன்றாக சமைப்பார் மனைவி அக்ஷதா மூர்த்தி பாராட்டு

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் சமையல் திறமையை அவரின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி பாராட்டியுள்ள சம்பவம் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தி இங்கிலாந்தின் 10 டவுனிங் தெருவில் தங்கள் மகள்கள் கிருஷ்ணா, அனுஷ்கா உடன் வசித்து வருகின்றனர். சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இவர்கள் இருவரும் இணைந்து

அளித்துள்ள பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.தன் கணவர் ரிஷி சுனக்கின் சமையல் திறமை குறித்து கூறிய அக்ஷதா மூர்த்தி, “அவர் சிறந்த சமையலாளர். ரிஷிக்கு நிச்சயமாக அந்தத் துறையில் அதிக திறமை இருக்கிறது. நாட்டை நடத்தும் பிஸியான வேலையோடு, சமையலறையில் செலவிட அவருக்கு

அதிக நேரம் கிடைப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.அதனை ஆமோதிக்கும் வகையில் ரிஷி சுனம், “முக்கியமாக சனிக்கிழமை காலை உணவு மட்டும், அதிலும் பிரிட்டிஷ் சமையல்காரர் கோர்டன் ராம்சே செய்யும் முட்டைத் துருவலைச் நான் செய்வேன்’ என்று கூறினார்.

இவர்கள் இருவரும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்தச் சமயத்தில் தனது சுகாதாரமற்ற பழக்க வழக்கங்கள் சுனக்கை துன்புறுத்தியதாக அக்ஷதா பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது, “நாங்கள் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, என் படுக்கையிலேயே சாப்பிடுவேன். ரிஷி நான் வசிக்கும் இடத்திற்கு வருவார். சில சமயங்களில் என் படுக்கையில் தட்டுகள் இருக்கும்.” என தெரிவித்தார்.

இருவரில் ரிஷி சுனக் மிகவும் நேர்த்தியானவர் என்று இருவருமே ஒப்புக் கொண்டனர். இருவருக்குமே தற்போது 43 வயதாகிறது. இரண்டு பிள்ளைகளுக்குப் பெற்றோராக இருப்பவர்கள், தங்களின் பிள்ளைகளின் வேலைகளையும் சமமாகப் பிரித்துக் கொள்கிறார்கள். அக்‌ஷதா குழந்தைகளின் வீட்டுப்பாடத்தில் கவனம் செலுத்த, ரிஷி சுனக் வீட்டின் மீதமுள்ளவற்றை கவனித்துக் கொள்கிறார்.

பள்ளி தொடர்பான விஷயங்களில் நான் மிகவும் கண்டிப்பானவள், அவர்கள் வீட்டுப் பாடங்களைச் செய்கிறார்களா, படிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துவேன். பள்ளி தொடர்பான எதையும் சிறப்பாகச் செய்வதை உறுதி செய்வேன்’ என அஷிதா தெரிவித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து அமெரிக்க சிட்காம் தொலைக்காட்சி தொடரான “ஃபிரெண்ட்ஸ்’ எபிசோட்களை பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலி விலகினார்