in ,

விவசாயி சின்னம் கிடைப்பதில் சீமானுக்கு சோதனை


Watch – YouTube Click

விவசாயி சின்னம் கிடைப்பதில் சீமானுக்கு சோதனை

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, கடைசியாக 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 6.72 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், இதுவரை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு இடங்களில் கூட வெற்றிபெற்றதில்லை.
பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கர்நாடகா கட்சிக்கு நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த கட்சியாக இருந்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் அந்த கட்சி போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, நாம் தமிழர் கட்சியின் சின்னம், கர்நாடக கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக முறையீட நாம் தமிழர் கட்சி ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

திருச்சி பெல் நிறுவன ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சிங்கக் கேடய சப்பரத்தில் வீதி உலா