in ,

நெய்வேலியில் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் ஆலோசனைக் கூட்டம்

நெய்வேலியில் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் ஆலோசனைக் கூட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொள்ளுகாரன்குட்டை பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது  இதில் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்ட கழக செயலாளர் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் தமிழரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

மேலும் முன்னாள் அமைச்சர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம் சி தாமோதரன் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பாண்டியன் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மோகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார் இதில்

கழக அண்ணா தொழிற்சங்க பேரவையில் இணைந்து செயல்பட்டு வரும் போக்குவரத்து பிரிவு மின்சார பிரிவு தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் செயல்பட்டு வரும் இணைப்பு சங்கங்களில் செயல்பாடுகள் குறித்தும் தொழிற்சங்க வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது மேலும்

நடந்து முடிந்த சட்டமன்றத் தொகுதியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறியும்

ஆளும் அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது போல் விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் நெய்வேலி என்எல்சியில் 3769 கோடி லாபத்தில் இயங்கும் என்எல்சி நிறுவனம் மூன்று சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பது இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது….

What do you think?

திருநங்கைகள் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காமல் யாசகம் கேட்க வேண்டும்