in

ஸ்ரீ இரட்டை விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

ஸ்ரீ இரட்டை விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

 

கொடைரோடு அருகே தர்மாபுரி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ இரட்டை விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில், நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ இரட்டை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவில் நேற்று முன்தினம் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பிரமாண்ட யாகசாலையில் வைத்து, கணபதி ஹோமம், கோபூஜை, லட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, உயிரூட்டல் நிகழ்ச்சி உள்ளிட்ட ஆறுகால யாக வேள்விகள் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்வாக இன்று கடாம் புறப்படும் நிகழ்ச்சியை அடுத்து, சீனிவாச நரசிம்ம சர்மா சுவாமிகள் தலைமையில்,சுரேஷ் பவுன் சிவாச்சாரிகள் முன்னிலையில் மங்கல இசையுடன் வேத மந்திரங்கள் முழங்க இராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது அப்போது கருட பகவான் வானில் வட்டமிட்டது பக்தர்களை பக்திபரவசத்தில் ஆழ்த்தியது, அதனைத்தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, சின்னாளபட்டி, செம்பட்டி, சோழவந்தான் மற்றும் நெல்லை, மதுரை, கோவை, பாண்டிச்சேரி, சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதான வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டது….

What do you think?

மாங்கரை காளியம்மன் பகவதியம்மன் திருக்கோவில் ஆனி உற்சவ விழா

பெரும்பேர் கண்டிகை அருள்மிகு எல்லையம்மன் கோயில் ஊரணி பொங்கல்