in

மாங்கரை காளியம்மன் பகவதியம்மன் திருக்கோவில் ஆனி உற்சவ விழா

மாங்கரை காளியம்மன் பகவதியம்மன் திருக்கோவில் ஆனி உற்சவ விழா

 

மாங்கரை காளியம்மன் பகவதியம்மன் திருக்கோவில் ஆனி உற்சவ விழா 200கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் மாங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் அருள்மிகு ஶ்ரீ பகவதி அம்மன் திருக்கோவில் இங்கு வருடம் தோறும் ஆனி உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கடந்தவாரம் 7ம் தேதி செவ்வாய்க்கிழமை சாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது செவ்வாய்க்கிழமை இரவு மாங்கரை ஆற்றிலிருந்து அம்மன் கரகம் ஜோடிக்கப்பட்டு புதன்கிழமை அதிகாலை கோவில் முன்பு சக்திக்கிடாய் வெட்டி அம்மன் கரகம் கோவிலை வந்தடைந்தது.

பின்னர் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் தீச்சட்டி மாவிளக்கு எடுத்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

வியாழக்கிழமை இரவு முளைப்பாரியை ஊர்மந்தையில் வைத்து 100கும் மேற்பட்ட பெண்கள் கும்மிடித்து வழிபட்டனர் தொடர்ந்து கரகம் கங்கை செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

200கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியுடன் மேளதாளம் முழங்க ஆட்டம்பாட்டத்துடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் கரகம் கங்கை சென்றடைந்தது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாங்கரை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

திருவிழாவை முன்னிட்டு ஊர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

What do you think?

இரட்டணை திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா

ஸ்ரீ இரட்டை விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா